சின்டெக்ஸ் தொட்டி, குழாய் சேதத்தால் சிரமத்தில் மக்கள்

கரூர்:கரூர் அருகே, சின்டெக்ஸ் தொட்டி, குழாய்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாநகராட்சி, வாங்கல் சாலையில் உள்ள பாலம்மாள்புரத்தில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வசதிக்காக, மாநகராட்சி சார்பில், குடிநீர் குழாய் போடப்பட்டது. மேலும், போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டாரும் பொருத்தப்பட்டது. இந்நிலையில், சின்டெக்ஸ் தொட்டி மற்றும் குழாய்கள் சேதம் அடைந்தள்ளது. மின் மோட்டாரை இயக்க, அமைக்கப்பட்ட சுவிட்ச் போர்டுகளும் சேதம் அடைந்துள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, கரூர் மாநகராட்சி நிர்வாகம், பெரிய குளத்துப்பாளையம் பகுதியில், சின்டெக்ஸ் தொட்டியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement