தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி,:சின்னதாராபுரம், கடைவீதியின் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.

கரூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில், சின்னத்தாராபுரம் கடைவீதி முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு தென்னிலை சாலை, கரூர் சாலை மற்றும் தாராபுரம் செல்லும் மூன்று சாலைகள் ஒரே இடத்தில் சந்திப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள், பஸ்கள் அடிக்கடி சென்று வருவதால் சில நேரங்களில் விபத்து
களும் ஏற்படுகிறது. இதனை தடுக்க மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement