கரூர் வட்டார பகுதிகளில் பனங்கிழங்கு விற்பனை
கரூர்:மழை
காரணமாக, கரூர் மாவட்டத்தில் பனங்கிழங்கு விளைச்சல்
அதிகரித்துள்ளது. இதனால், கரூர் வட்டார பகுதிகளில் அதன் விற்பனை
ஜோராக நடந்து வருகிறது.
தமிழகத்தில், மார்ச் முதல் மே வரை நுங்கு
சீசன் களை கட்டும். அப்போது, கோடைக்காலம் என்பதால், உடலுக்கு
குளிர்ச்சியை ஏற்படுத்தும், நுங்குக்கு கடும் கிராக்கி இருக்கும்.
ஆனால், சீசன் காலத்தில் மரம் ஏறும் தொழிலாளர்கள் பற்றாக்குறை
காரணமாக, பனை மரத்தில் இருந்து நுங்கை வெட்டி, விற்பனை செய்ய
விவசாயிகளால் முடியவில்லை. மரத்தில் நுங்கு பழுத்து, பனை பழமாக மாறி
கீழே விழுந்தது. அதன் விதைகளை, பனை கிழங்காக மாற்ற விவசாயிகள்
பூமிக்கடியில் புதைத்து வைத்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக, கரூர்
மாவட்டத்தில் ஒரளவுக்கு மழை பெய்ததால், பனை கிழங்கு விளைச்சல் பரவலாக
அதிகரித்துள்ளது. இதையடுத்து, கரூர் நகரம் மற்றும் வட்டார
பகுதிகளில், ஒரு பனங்கிழங்கு, மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை விற்பனை
செய்யப்படுகிறது. உடலில் இரும்பு சத்து, நார்ச்சத்துகளை
அதிகப்படுத்தும், பனங்கிழங்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி
செல்கின்றனர்.
மேலும்
-
மேற்கு வங்க இடைத்தேர்தல்; இரு தொகுதிகளிலும் பாஜ முன்னிலை
-
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்
-
தாராபுரம், மதுராந்தகம் 2 தொகுதியிலும் தவெக முன்னிலை; புதுச்சேரியில் என்ஆர்காங்கிரஸ் வெற்றி
-
அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
-
பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்