கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் பள்ளங்களால் டிரைவர்கள் அவதி

கரூர்:கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில், பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.

கரூரில் கடந்த, 1984ல் இருந்து தற்-போது உள்ள இடத்-தில் பஸ் ஸ்-டாண்ட் செயல்-பட்டது. சில மாதங்களுக்கு முன், திருமாநிலையூரில், 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. தற்போது, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு டவுன் மற்றும் சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் வருகின்றன.
கரூர் அருகே திருமாநிலையூரில், புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்படும் நிலையில், டெக்ஸ்-டைல்ஸ், பஸ் -பாடி கட்-டும் தொழில் மற்-றும் கொசு-வலை உற்-பத்தி தொழிலாளர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட்டுக்கு வருகின்றனர். குறிப்-பாக நாள்-தோ-றும், 100க்-கும் மேற்-பட்ட பஸ்-க-ளும், ஆயி-ரக்-கணக்-கான பொது-மக்-க-ளும் பஸ் ஸ்-டாண்-டுக்கு வரு-கின்-றனர். குறுகிய இடத்தில் செயல்படும் கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில், தள்ளு
வண்டிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்கின்றனர். இருசக்கர வாகனங்கள், கார்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழைய பஸ் ஸ்டாண்டில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள பள்ளங்கள், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement