2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடக்குமா? 7 நாடுகள் போட்டி

லாசேன்: வரும் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா உட்பட 7 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐ.ஒ.சி., தெரிவித்துள்ளது.

உலகின் பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். 4 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும். கடைசியாக 2024ல் பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. அடுத்து 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், 2032ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடக்க உள்ளன. வரும் 2036ல் இந்தியாவில் இப்போட்டியை நடத்த முயற்சி நடக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக, 2036ல் ஆமதாபாத்தில் ஒலிம்பிக் நடத்த விருப்பம் தெரிவித்து, இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஒ.ஏ.,), சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் (ஐ.ஒ.சி.,) முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

இதுகுறித்து ஐ.ஒ.சி., வெளியிட்ட அறிக்கையில்,' வரும் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா, ஜெர்மனி, கத்தார், தென் ஆப்ரிக்கா, துருக்கி, தென் கொரியா, ஹங்கேரி என 7 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. போட்டி நடக்க உள்ள இடத்தின் விரிவான திட்டம், விளையாட்டு நட்சத்திரங்களின் அனுபவம், நிதி திரட்டும் வலிமை, அரசியல், பொதுமக்களின் ஆதரவு, போட்டி நடத்தும் திறமை, இதனால் ஏற்படும் நீண்டகால பலன்கள் குறித்த விரிவான அறிக்கையை, விருப்பமுள்ள நாடுகள் அளிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவு எப்போது



ஒலிம்பிக் நடத்தும் நாடு குறித்து முடிவு செய்யும் கடைசி கட்ட தேர்வு 2028ல் துவங்கும். 2029 ம் ஆண்டில் போட்டி நடக்கும் இடம் முடிவாகும்.

Advertisement