சாட்சியை மிரட்டிய சகோதரர்கள் கைது

பண்ருட்டி: கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையத்தை சேர்ந்தவர் காசிநாதன் மகன் கார்த்திகேயன். கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில், அதே ஊரை சேர்ந்த மணி மகன் தென்குமாரை புதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் சாட்சியான அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை மகன் கார்த்திகேயனை பார்க்க அவரது வீட்டிற்கு பார்த்திபன் சென்றார்.

அப்போது வந்த தென்குமார், அவரது அண்ணன் தேவநாதன்,35; இருவரும் எங்களுக்கு எதிராக சாட்சி சொன்னால், உன்னையும், உன் குடும்பத்தையும் தீர்த்துகட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பார்த்திபன் அளித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தென்குமார், அவரது அண்ணன் தேவநாதன்ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement