மரத்தடியில் ராகுல், பிரியங்கா; ஆகாஷ்வாணி ஊழியர்களுக்கு தரமான பொழுதுபோக்கு

6

புதுடில்லி: டில்லி ஆகாஷ்வாணி பவன் ஆலமரத்தடியில் ராகுல், பிரியங்கா இருவரும் போராட்டம் என்ற பெயரில், பொழுது போக்கியது வலைதளங்களில் பரவி வருகிறது.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, நேற்று (அக் 06) எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஊர்வலமாக புறப்பட்டார். ஆனால் வழியிலேயே போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.

பிறகு போலீசாரின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், அங்கிருந்த ஆகாஷ்வாணி பவனின் கேட் எண் 3 வழியாக ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வளாகத்திற்குள் நுழைந்தனர்.

வளாகத்திற்குள் நுழைந்த காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள், அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில், மெத்தை, தரைவிரிப்புகளை விரித்து அமர்ந்து கொண்டனர். உடனடியாக அவர்களுக்கு டில்லியின் முன்னணி உணவகங்களில் இருந்து உணவுகள் வரவழைக்கப்பட்டன.
Latest Tamil News
சாப்பிட்டுக் கொண்டு, கதை பேசியபடி, அவ்வப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் பொழுதுபோக்கினர். ராகுல் என்ன சாப்பிடுகிறார், பிரியங்கா என்ன செய்கிறார் என்பது பற்றிய படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வலைதளங்களில் வந்த வண்ணம் இருந்தன. நடப்பதை எல்லாம் ஆகாஷ்வாணி ஊழியர்கள் பார்த்து ரசித்து பொழுது போக்கினர்.

Advertisement