தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.1,09,680க்கு விற்பனை
சென்னை: சென்னையில் இன்று (அக் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 13,710 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் (அக் 05) தங்கம் விலை ஒரு கிராம் 13 ஆயிரத்து 675 ரூபாய்க்கும், சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (அக் 06) தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 660 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (அக் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 13,710 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும்
-
இன்று 9 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
வரும் தேர்தலில் தவெக மட்டுமே வெற்றி பெறும்: அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார் பேட்டி
-
3000 ஆண்டு பழமையான குதிரையின் எலும்புக்கூடு; எகிப்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் புதிய தகவல்கள்
-
தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
இந்தியாவுக்கே திரும்பி வாங்க; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு