பஸ் ஸ்டாண்டில் சி.சி.டி.வி., கேமரா பழுது: கண்காணிக்க முடியாமல் போலீஸ் திணறல்
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் உள்ள 22 சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதானதால் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க முடியாமல் சிரமப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் தொடர்ச்சியாக போன் திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் இருப்பதாகய போலீசாருக்கு புகார் சென்றது.
இதையொட்டி பஸ் ஸ்டாண்டில் அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்களும் வலியுறுத்தினர்.
கடந்த காலங்களில் நகராட்சி உதவியோடு பஸ் ஸ்டாண்ட் முழுவதும் 22 இடங்களில் சி.சி.டி.வி.,கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தற்போது கடந்த 3 நாட்களாக இந்த கேமராக்கள் இயங்கவில்லை. இதனால் போலீசாரால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பிக்பாக்கெட் திருடர்கள், வழிப்பறி கொள்ளையர் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பஸ் ஸ்டாண்டில் பழுதாகியுள்ள சி.சி.டி.வி., கேமராக்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
சென்னையில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் சந்திப்பு
-
தமிழகத்தில் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ரோபோ செய்யும்!
-
இந்தியாவை விட்டு ராகுல் போய்விட்டாலே அச்சுறுத்தல் இருக்காது; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்த ஆண்டும் கிடைக்கவில்லை அமைதிக்கான நோபல் பரிசு; புலம்பி தவிக்கும் அதிபர் டிரம்ப்
-
தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…