தமிழகத்தில் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

1

மதுரை: ''தமிழகத்தில் எந்த போராட்டத்திற்கும் தடை விதிக்கவில்லை; அனுமதிக்கப்படாத இடத்தில் போராடினால் மட்டுமே கைது செய்யப்படுவர்'' என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி: எஸ்ஐஆர்- ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் போராடிய கட்சி தமிழக வெற்றிக்கழகம்; எஸ்ஐஆருக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தமிழகத்தில் எந்த போராட்டத்திற்கும் தடை விதிக்கப்படவில்லை அனுமதிக்கப்படாத இடத்தில் போராடினால் கைது செய்யப்படுவர்.

அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தினால் போலீசாரும், அரசும் உறுதுணையாக இருக்கும். டில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சியின் போராட்டத்திற்கு பின்னால் இருந்து யார் இயக்குகிறார்கள் என்று தெரியாது. தனி இயக்கம் அல்லது அமைப்பு நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க தேவையில்லை.

எதிர்க்கட்சியாக இருந்த போது பாஜவை எதிர்த்து திமுக கருப்பு பலூன் பறக்க விட்டது. ஆட்சிக்கு வந்த போது, பாஜவை எதிர்த்து ஸ்டாலினும், உதயநிதியும் பேசியுள்ளனரா? முதல்வர் விஜயை பார்த்து கேள்வி கேட்க திமுகவிற்கு அருகதை இல்லை; கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த போது, பாஜவை எதிர்த்து திமுக பேசி இருக்கிறதா? இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.

Advertisement