ராகுலுக்கு விருந்தளித்த முதல்வர் விஜய்

25

சென்னை: மாணவர்களின் குரல் என்ற பெயரில் நாடு முழுதும் மாணவர்களை சந்தித்து காங்கிரஸ் எம்பி ராகுல் கலந்துரையாடி வருகிறார்.

சென்னை தீவுத்திடலில் இன்று மாலை மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, டில்லியில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னைக்கு வந்தார்.

அதன்பிறகு, நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு ராகுல் சென்றார். அங்கு கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அங்கிருந்து முதல்வர் விஜய்யும், காங்., எம்பி ராகுலும் ஒரே காரில் புறப்பட்டனர். பாலவாக்கத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் தோனிக்கு சொந்தமான ஹோட்டலில் ராகுலுக்கு முதல்வர் விஜய் விருந்தளித்தார்.

Advertisement