கடன் சுமை இருந்தாலும் சிறப்பான ஆட்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
நமது நிருபர்
''கடும் நிதி நெருக்கடி இருந்தானாலும், ஒரு நாளுக்கு, 342 கோடி ரூபாய் வட்டியை செலுத்தி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது,'' என, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில் அவர் கூறியதாவது: தாராபுரம், மதுராந்தகம் இடைத் தேர்தலில், 75 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், த.வெ.க., வெற்றி பெறும். 13 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை என்ற, கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும், ஒரு நாளுக்கு, 342 கோடி ரூபாய் வட்டியை செலுத்தி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனுக்கான திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது.
முதல்வர் விஜய் குறித்து, முன்னாள் முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர்; அவர்களுடைய தகுதியே அவ்வளவுதான். அ.தி.மு.க., பொதுச்செயலராக இபிஎஸ் வந்த பின், 12 தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளார்.
அதனால் விரக்தியின் எல்லையில் இருக்கும் அவரும், முதல்வர் குறித்து அவதூறாக பேசி திரிகிறார். அநாகரிக பேச்சுக்காக வழக்கு போடுவது, கைது செய்வது என்பதெல்லாம் வேறு. ஆனால், நாகரிகமற்ற முறையில் பேசுவதே தவறு தான்; எப்போதும், நாகரிகமான அரசியல் மட்டுமே தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (7)
HoneyBee - Chittoir,இந்தியா
07 அக்,2026 - 21:36 Report Abuse
எவ்வளவு கேவலமாக இருக்கிறது 0
0
Reply
ஞானசேகர் - ,
07 அக்,2026 - 20:10 Report Abuse
ஒரு சாதாரண குடும்ப தலைவன் அத்தியாவசிய செலவுகளை கூட கட்டுப்படுத்தி திறமையாக குடும்பத்தை வழி நடத்தி செல்கிறான். ஏனோ இந்த அரசியல்வாதிகளுக்கு புரிய மாட்டேங்குது. 0
0
KRISHNAN R - chennai,இந்தியா
07 அக்,2026 - 20:51Report Abuse
அக்கறை இல்லை 0
0
N.Narayanan S.Narasimhan - ,
07 அக்,2026 - 21:17Report Abuse
உண்மைதான் ஐயா,ஆனால் அவர் கல்வி அமைச்சராக இருந்த போது எப்படி இருந்தார். 0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
07 அக்,2026 - 19:24 Report Abuse
இதுபோன்று அனுதினமும் வட்டிக்கட்டி ஆட்சி நடத்துவது என்பது நடைமுறைக்குக் சாத்தியமாகாது. இதற்கு ஒரு தீர்வினை கண்டுபிடித்து கடனை அடைக்க திட்டங்களை தீட்ட வேண்டும். இலவசங்களால் மக்களை எவ்வளவு காலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்? நிதியமைச்சரை சந்தித்து இதற்கான தீர்வை காண முயற்சிக்க வேண்டும். பிரதமரிடம் எடுத்து சொல்லி கடனை அடைக்க மத்திய அரசு உதவும்படி கோரிக்கை வைக்க வேண்டும். ஊழல் செய்தவர்களை தண்டித்தால்தான் மக்களிடம் உங்களுக்கு நற்பெயர் வரும் என்பது உறுதி. முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது எவ்வளவோ ஊழல் புகார்கள் இருந்தும் அவர்களை விட்டுவைத்திருப்பதுதான் ஏன் என்றே தெரியவில்லை. அப்படி நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் உங்கள் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே போகும். 0
0
Reply
சந்துரு - ,
07 அக்,2026 - 19:00 Report Abuse
இப்போது ஒரு நாளைக்கு வட்டியாக மட்டுமே 342 கோடி ரூபாய் தமிழக அரசு செலுத்தி வருவதாக நிதி அமைச்சராக முதலில் அறிவிக்கப் பட்ட செங்கோட்டையனே கூறுகிறார். இவர்களாவது தேவையற்ற இலவசங்களில் மாற்றம் செய்வார்கள் என பெரிதும் எதிர்பார்த்தோம். ஆனால் இப்போதைய த. வெ.க அரசு முந்தைய தி.மு.க அரசை மிஞ்சும் வகையில் பல்வேறு இலவச திட்டங்களுக்காக மேலும், மேலும் கடன் வாங்கி தமிழ் நாட்டை திவாலா நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். இதற்கு பெயர்தான் நல்லாட்சியாம். 0
0
Reply
மேலும்
-
சென்னையில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் சந்திப்பு
-
தமிழகத்தில் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ரோபோ செய்யும்!
-
இந்தியாவை விட்டு ராகுல் போய்விட்டாலே அச்சுறுத்தல் இருக்காது; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்த ஆண்டும் கிடைக்கவில்லை அமைதிக்கான நோபல் பரிசு; புலம்பி தவிக்கும் அதிபர் டிரம்ப்
-
தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…
Advertisement
Advertisement