வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5.30 லட்சம் மோசடி: டிராவல்ஸ் உரிமையாளர் கைது

1

திருநெல்வேலி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5.30 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, தனியார் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டெல்லா பேபி 54, கைது செய்யப்பட்டார்.

தச்சநல்லூரை சேர்ந்த நடராஜன், தனது மகன் விஜயை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக ஆகாஷ் டூர்ஸ் & டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார். இதற்காக கடந்த ஆண்டு ஜூலை 1ல் ரூ.76 ஆயிரமும், நவம்பர் 3ல் ரூ.4.54 லட்சமும் செலுத்தியுள்ளார். மொத்தம் ரூ.5.30 லட்சம் வழங்கியதுடன், டில்லி சென்று வந்தது, என்.ஓ.சி உள்ளிட்ட செலவுகளுக்காக மேலும் ரூ.1.25 லட்சம் செலவு செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை கிடைத்ததாக போலியான நிறுவனங்கள் மற்றும் தவறான தகவல்கள் மூலம் தன்னையும் மகனையும் ஏமாற்றியதாக நடராஜன் புகார் அளித்தார். இதையடுத்து, திருநெல்வேலி ஜங்ஷன் போலீசார் ஸ்டெல்லா பேபியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement