காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது: பதுங்கு குழி தகர்ப்பு; ஆயுதங்கள் பறிமுதல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயல்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களின் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது; பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் இணைந்து கிரேவன் சட்டர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றிய பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேரை பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பதுங்கு குழி தகர்ப்பு:
இதேபோல், வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் உள்ள நாக்டா நர் வனப்பகுதியில், ராணுவமும் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அடர்ந்த காட்டின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் பழைய பதுங்கு குழி ஒன்றை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த பதுங்கு குழியை வெடிவைத்து தகர்த்து தரைமட்டமாக்கினர்.
அந்த இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1 ஏ.கே-47 துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள், 857 ஏ.கே ரக தோட்டாக்கள், 192 பிகா ரக தோட்டாக்கள், 8 ஏ.கே மேகசீன்கள், 1 சைலன்சர், 83 பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் பல ஆவணங்கள், பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தை வேரறுக்க பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களெல்லாம் வெறும் சமாதானப் புறாக்கள், இவர்களை ஏன் கைதுச் செய்தீர்கள்
ஐந்து புல்லட் செலவு செய்து விட்டு போகலாம் தவறில்லை, இவர்களுக்கு தினசரி செலவு, கோர்ட், விசாரணை, தண்டனை கிடைத்தால் சந்தோசம், விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவனை வெளியில் விடவேண்டும் நேரம் பண விரயம் மிச்சப்படுத்த ஐந்து புல்லட் செலவு அவ்வளவு தான். இவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும். இது தான் எனது ஆசை.
உள் நாட்டு throgokikal. முதல்ல இவனுகளை ஓடவிட்டு என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்மேலும்
-
சென்னையில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் சந்திப்பு
-
தமிழகத்தில் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ரோபோ செய்யும்!
-
இந்தியாவை விட்டு ராகுல் போய்விட்டாலே அச்சுறுத்தல் இருக்காது; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்த ஆண்டும் கிடைக்கவில்லை அமைதிக்கான நோபல் பரிசு; புலம்பி தவிக்கும் அதிபர் டிரம்ப்
-
தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…