தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க பரிந்துரை
புதுடில்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய தண்ணீரை திறக்க கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், காவிரி நீரை நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி நீரைப் பெறுவதற்காக, தமிழக அரசும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடுமாறு, காவிரி ஒழுங்காற்று வாரியத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதனைக் கேட்ட ஒழுங்காற்று வாரியம், வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இன்று பிற்பகல் கூடும் இந்த ஆணையத்தின் கூட்டத்தில், இது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
வாசகர் கருத்து (1)
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
08 அக்,2026 - 18:07 Report Abuse
இதுவரை எத்தனை முறை நீங்களும் உத்தரவு போட்டு இருக்கிறீர்கள். அவர்கள் எத்தனை முறை தண்ணீர் திறந்து விட்டு இருக்கிறார்கள் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement