கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

கோட்டக்குப்பம்: கஞ்சா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து, 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, கீழ்புத்துப்பட்டு அய்யனாரப்பன் கோவில் பின்புறம் ஒரு வாலிபர் சந்தேகப்படும் படி நின்றிருந்தார்.

அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது, அவர் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் கீழ்புத்துப்பட்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரவி மகன் அரவிந்த், 24; என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1 கிலா 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement