பெண்ணை தாக்கிய 4 பேருக்கு வலை
வடலூர்: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
வடலூர், நேதாஜி நகரை சேர்ந்தவர் சரவணகுமார் மனைவி சிந்துமதி,26; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மனைவி மணிமேகலைக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை சிந்துமதியின் வீட்டிற்கு சென்ற மணிமேகலை தரப்பினர், அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், சிந்துமதி மற்றும் அவரது உறவினரின் கூரை வீடுகளை மணிமேகலை தரப்பினர் எரிக்க முயன்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட மணிமேகலை, அவரது கணவர் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேரை தேடிவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement