கஞ்சா விற்ற வாலிபர் கைது
புதுச்சேரி: வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். ஒதியம்பட்டு நரிக்குறவர் காலனி பகுதியில் வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓடினார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், ஒதியம்பட்டு பழங்குடி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் 33, என்பதும், அவர் இளைஞர்களுக்கு, பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement