ஓய்வூதியர் குறை தீர விண்ணப்பிக்கலாம்

1

மதுரை: மதுரை மாவட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நவ.13 ல் காலை 10:30 மணிக்கு நடக்க உள்ளது.

ஓய்வூதிய பலன்களை பெற, தங்கள் குறைகளை குறிப்பிட்டு கலெக்டருக்கு நவ.5க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மனுவின் மீது 'ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்ட மனு' எனக் குறிப்பிட வேணடும். விண்ணப்பம், தொடர்புடைய ஆவணங்களின் 2 நகல்கள் கண்டிப்பாக அனுப்ப வேண்டும். ஓய்வூதியர் பெயர், குடும்ப ஓய்வூதியம் பெற்றால் உறவு முறையை குறிப்பிட வேண்டும்.

ஏற்கனவே ஓய்வூதியம் பெறுவோர் எனில், அவை தொடர்பான விவரம், ஓய்வூதிய புத்தக எண், கருவூலத்தின் பெயர் குறிப்பிட வேண்டும். இதுதொடர்பாக மாநில கணக்காயருக்கு அனுப்பி இருந்தால் அதன் விவரம் வேண்டும்.ஓய்வூதியர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய அலுவலர், அலுவலகத்தின் முகவரி, தொடர்பு எண்ணுடன் இருக்க வேண்டும் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Advertisement