கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய டாக்டர்கள்
திண்டுக்கல்: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்களை பணிநிரவல் செய்து 113வது அரசாணை வெளியிட்டு அதனை அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்த அரசாணையை மறுஆய்வு செய்து திருத்தம் செய்ய வேண்டும், டாக்டர் பணியிடங்களை உயர்த்த வேண்டும், தாய் சேய் நல ஒருங்கிணைந்த சிகிச்சை மையங்களில் கூடுதல் டாக்டர்களை பணி அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கத்தினர் நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சீனிவாசன், மாவட்ட தலைவர் திருலோகச்சந்திரன், டாக்டர் நாகராஜன் ஆகியோர் அறிவுறுத்தலில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெரிய வெங்காயத்துக்கு பதிலாக முட்டைக்கோஸ்
-
மறுவாழ்வு மையங்களின் நிலை என்ன?
-
அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்க மறுத்ததை எதிர்த்து பொதுநல வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
-
துாய சக்தியின் செயல்பாடு தேர்தல் முடிவில் தெரியும்
-
வண்டலுார் – வாலாஜாபாத் சாலையில்: வண்டலுார் – வாலாஜாபாத் சாலையில்
-
காசநோய் இல்லாத 2,390 பஞ்சாயத்துகள்
Advertisement
Advertisement