திடக்கழிவு மேலாண்மை சவால் தீர்வு காண 'கிளியர்' திட்டம்

சென்னை: 'திடக்கழிவு மேலாண்மை உள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், 'கிளியர்' திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சி மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து, 'கிளியர்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம் குறித்து கலந்துரையாடல் கூட்டம், மாநகராட்சி கமிஷனர் சமீரன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் உள்ள சவால்கள் குறித்து, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆய்வு தொடங்கியுள்ளது.

தற்போது, தண்டையார்பேட்டை, அம்பத்துார், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் தலா ஒரு வார்டில், ஆய்வு செய்ய உள்ளனர்.

எவ்வளவு மக்கும் குப்பை, மக்காத குப்பை பெறபப்படுகிறது. அவற்றை எப்படி மறுசுழற்சி செய்யலாம். குப்பை வாயிலாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் உடல்நல பாதிப்பை தடுப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான தீர்வு ஏற்படுத்தப்படும்.

அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி வாயிலாக, நான்கு ஆண்டுகளில், துாய்மையான மற்றும் ஆரோக்கியமான சென்னை உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement