போலீஸ் செய்திகள்: திண்டுக்கல்
2வது திருமணத்திற்கு வற்புறுத்தி தாக்குதல்
வடமதுரை: பிலாத்து கலைஞர் நகரை சேர்ந்தவர் தனியார் நிதி நிறுவன ஊழியர் மகாலட்சுமி 24. இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் இறந்தார். மகாலட்சுமியின் அக்கா கணவர் மூர்த்தி தன்னை 2வது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார். மறுத்த மகாலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரில் மூர்த்தியை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளி மாணவர் மாயம்
எரியோடு: எரியோடு எருதப்பன்பட்டியை சேர்ந்த 14 வயது சிறுவன், தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். காலாண்டு பள்ளி விடுமுறையில் அக்.,2ல் வீட்டில் இருந்த போது மாயமானார். எரியோடு இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர். இம்மாணவர் ஏற்கனவே 4 முறை மாயமாகி வீடு திரும்பினார். ஆன்மிக ஈடுபாட்டால் பல கோயில்களுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பியது விசாரணையில் தெரிந்தது.
மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி
ஆயக்குடி: பழநி அருகே பாப்பம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் 36. சிந்தளவாடம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தார். நேற்று சட்டபாறை அருகே தாழ்வாக சென்ற மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் ராஜ்குமார் இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சாம்சனுக்கு 'செக்' வைப்பாரா வைபவ்: இரண்டாவது 'டி-20' போட்டியில்
-
சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள்: 'பாரா' ஆசிய விளையாட்டில்
-
புவிசார் குறியீடு பொருட்களுக்கு விரைவில் டிஜிட்டல் கட்டமைப்பு; கைவினைஞர்களுக்கு என்ன பயன்?
-
நட்பு கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
-
காலிறுதியில் சிந்து: ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டனில்
-
இலங்கை அணிக்கு புதிய கேப்டன்: தனஞ்செயா டி சில்வா விலகல்