கோவில் நிலம் ஆக்கிரமிப்பு; மக்கள் மறியல்
பல்லடம்: பல்லடம் அருகே கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த பொதுமக்கள், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி, மாதேஸ்வரன் நகர் பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 3.5 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, பொதுமக்கள் கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், “கோவில் நிலத்தை மீட்டு, எதிர்காலத்தில் கோவில் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் பாதுகாக்க வேண்டும். நிலத்தை அளவீடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், தாராபுரம் இடைத்தேர்தல் பணிகள் காரணமாக தற்போது அளவீடு செய்ய முடியாது என தெரிவிக்கின்றனர். தேர்தலுக்கும், இப்பிரச்னைக்கும் தொடர்பில்லை. எனவே, உடனடியாக நிலத்தை அளவீடு செய்து மீட்டுத் தர வேண்டும்,” என்றனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பல்லடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் பணிகள் முடிந்ததும் நிலத்தை அளவீடு செய்து, தாசில்தார் உத்தரவின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
மேலும்
-
சாம்சனுக்கு 'செக்' வைப்பாரா வைபவ்: இரண்டாவது 'டி-20' போட்டியில்
-
சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள்: 'பாரா' ஆசிய விளையாட்டில்
-
புவிசார் குறியீடு பொருட்களுக்கு விரைவில் டிஜிட்டல் கட்டமைப்பு; கைவினைஞர்களுக்கு என்ன பயன்?
-
நட்பு கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
-
காலிறுதியில் சிந்து: ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டனில்
-
இலங்கை அணிக்கு புதிய கேப்டன்: தனஞ்செயா டி சில்வா விலகல்