காலிறுதியில் சிந்து: ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டனில்

வாண்டா: ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.

பின்லாந்தில், ஆர்க்டிக் ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் ரிகோ மோதினர். மொத்தம் 49 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா 18-21, 7-21 என, தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானன்னிடம் வீழ்ந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தருண், பிரான்சின் கிறிஸ்டோ போபோவ் மோதினர். இதில் தருண் 14-21, 19-21 என தோல்வியடைந்தார்.

முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 15-21, 13-21 என, கனடாவின் பிரையன் யாங்கிடம் வீழ்ந்தார்.

Advertisement