நட்பு கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
கொல்கட்டா: சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி 0-4 என, ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
இந்தியா வந்துள்ள ரஷ்ய பெண்கள் கால்பந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச நட்பு கால்பந்து தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொல்கட்டாவில் உள்ள கிஷோர் பாரதி கிரீரங்கன் மைதானத்தில் நடந்தது. இது, கொல்கட்டாவில் நடந்த சீனியர் இந்திய பெண்கள் அணிக்கான முதல் சர்வதேச போட்டியானது. இந்திய அணியில் மாலதி, பேபிசனா தேவி அறிமுகமாகினர்.
இப்போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 0-4 என தோல்வியடைந்தது. ரஷ்ய அணிக்கு இயானா ஷெய்னா (41வது நிமிடம்), கிரா பெதுகோவா (60, 65வது), இயானா ஸ்விஸ்துனோவா (81வது) கைகொடுத்தனர்.
இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி வரும் அக். 11ல் கொல்கட்டாவில் நடக்கவுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் சந்திப்பு
-
தமிழகத்தில் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ரோபோ செய்யும்!
-
இந்தியாவை விட்டு ராகுல் போய்விட்டாலே அச்சுறுத்தல் இருக்காது; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்த ஆண்டும் கிடைக்கவில்லை அமைதிக்கான நோபல் பரிசு; புலம்பி தவிக்கும் அதிபர் டிரம்ப்
-
தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…
Advertisement
Advertisement