இலங்கை அணிக்கு புதிய கேப்டன்: தனஞ்செயா டி சில்வா விலகல்
கொழும்பு: இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக குசால் மெண்டிஸ் நியமிக்கப்பட்டார்.
இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா 35, கடந்த 2024ல் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் விளையாடிய 18 டெஸ்டில், 7ல் வென்ற இலங்கை அணி, 8ல் தோற்றது. மூன்று டெஸ்ட் 'டிரா' ஆனது. இதுவரை 69 டெஸ்டில் (4431 ரன், 13 சதம், 43 விக்கெட்) பங்கேற்றுள்ளார் தனஞ்செயா. இதில் கேப்டனாக பேட்டிங்கில் 1130 ரன் (சராசரி 36.45) எடுத்த இவர், பவுலிங்கில் 9 விக்கெட் கைப்பற்றினார்.
இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் நேற்று, டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தனஞ்செயா அறிவித்தார். தவிர இவர், தொடர்ந்து டெஸ்டில் பங்கேற்கப்போவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக குசால் மெண்டிஸ் 31, நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர், ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு கேப்டனாக உள்ளார். இதுவரை 75 டெஸ்டில் (4836 ரன், ஒரு விக்கெட்) விளையாடி உள்ள குசால் மெண்டிஸ், 343 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இது, குசால் மெண்டிஸ் கேப்டனாக களமிறங்கும் முதல் டெஸ்ட் தொடர்.
மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்