மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கல்
வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சி அமைப்பின் சார்பில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருவார கால வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் திருச்சிற்றம்பலம் டைடல் பார்க்கில் நடந்தது.
பயிற்சி முடிந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பொருளியல் துறைத் தலைவர் வில்லியம் வாழ்த்தி பேசினார். கல்லுாரி முதல்வர் நாராயணன் தலைமையுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் டைடல் பார்க்கில் செயல்படும் எஸ்.யு.வி., நிறுவனத்தின் நிறுவனர் யுவராஜ் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான தகுதி குறித்து பேசி மாணவர்களுக்கு சான்றிதழ் வ ழங்கினார். கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் பங்கேற் றனர்.
வேலைவாய்ப்பு அதிகாரி காந்திமதி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement