காரிமங்கலத்தில் தொடர் திருட்டு நடவடிக்கையில் போலீசார் மெத்தனம்
தர்மபுரி; காரிமங்கலம் பகுதியில் கடந்த சில வாரங்க-ளாக தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களை பிடிப்பதில், போலீசார் மெத்த-னமாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்-துள்ளது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் உண்டியல் திருட்டு, வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு, டூவீலர்கள் மற்றும் மொபைல் திருட்டும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.காரிமங்கலம் அடுத்த சீகலஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணபதி, 50. இவர், தன் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகின்றார். இதை நோட்ட-மிட்ட மர்ம நபர்கள், கடந்த, 6ம் தேதி இரவு, வீட்டின் முன் கட்டி வைத்திருந்த, 2 ஆடுகளை சர்வசாதாரணமாக துாக்கி சென்றனர். இந்த 'சிசி-டிவி' காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில், சாம்பல் நிற காரில் வந்து, கையில் ஆயு-தங்களுடன், முகத்தை மூடியபடி, ஆடுகளை திருடி செல்லும் காட்சிகள்
பதிவாகி உள்ளன.
இரவில் ஆயுதங்களுடன் மர்மகும்பல் வந்ததும், அதன், 'சிசிடிவி' காட்சிகள் வெளிவந்த பின்னும் போலீசார் யாரையும் பிடிக்கவில்லை. போலீசார் இரவு நேர ரோந்து பணியில், மெத்தனமாக உள்-ளதாகவும், குற்றச்செயல்களை தடுக்க, ரோந்தை அதிகப்படுத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்-கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சென்னையில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் சந்திப்பு
-
தமிழகத்தில் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ரோபோ செய்யும்!
-
இந்தியாவை விட்டு ராகுல் போய்விட்டாலே அச்சுறுத்தல் இருக்காது; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்த ஆண்டும் கிடைக்கவில்லை அமைதிக்கான நோபல் பரிசு; புலம்பி தவிக்கும் அதிபர் டிரம்ப்
-
தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…