அரசு கல்லூரியில் வாக்காளர் பதிவு விழிப்புணர்வு முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில் முதல்வர் மைதிலி தலைமையில், முதல் தலை-முறை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தாசில்தார் லட்சுமி முன்னிலை வகித்தார். தனி தாசில்தார் பெருமாள், புதிய வாக்காளர்களாக மாணவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான வழி-முறைகள் மற்றும் அது தொடர்பான படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான செயல் விளக்கமும் அளித்தார். இதில் தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, ஆர்.ஐ., சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement