அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு

பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில், தமிழ் கூடல் நிகழ்ச்சி தலை-மையாசிரியர் கலைவாணன் தலைமையில் நடந்தது. முதுகலை தமிழாசிரியர் சுரேஷ் வர-வேற்றார்.

நிகழ்ச்சியில், திருப்பூரை சேர்ந்த எழுத்தாளர் ஜோதி பேசுகையில், மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் சிந்தனைகளையும், கற்பனைகளையும், எழுத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.கவிதை எழுதும் போது சொற்களை தேர்ந்தெ-டுக்கும் முறை, கருத்துக்களை எளிமையாகவும், அழகாகவும், வெளிப்படுத்தும் விதம், இயற்கை, மனிதநேயம், சமூக நிகழ்வுகள், உள்ளிட்ட பல்-வேறு கருப்பொருட்களை கவிதையாக மாற்றும் முறைகளை விளக்கினார்.
சிறுகதை எழுதுவதற்கான அடிப்படை அம்-சங்கள், கதாபாத்திரங்களை உருவாக்கும் முறை, கதையின் தொடக்கம், நிகழ்வுகளின் தொடர்ச்சி, உரையாடல்களை அமைக்கும் விதம் மற்றும் சிறப்பான முடிவை உருவாக்குவது குறித்து, தமிழ் மொழியின் தொன்மை, வளமை மற்றும் சிறப்புகளை எடுத்துரைத்து, மாணவர்கள் தங்கள் காணும் நிகழ்வுகளை யும், அனுபவங்களையும், கவனித்து அவற்றை சிந்தனையுடன் பதிவு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள, அறிவு-றுத்தினார்.
நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்திபன், முதுகலை ஆசி-ரியர் சென்னகிருஷ்ணன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

Advertisement