5 யூனிட் மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்

அரூர்; அரூர் - திருப்பத்துார் சாலையில், கொங்க-வேம்பு பஸ் நிறுத்தம் அருகில், நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு, அரூர் தாசில்தார் மனோ-கரன் மற்றும் வருவாய்த்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த, 2 டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி, 5 யூனிட் மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. டிரைவர்கள் தப்பியோடிய நிலையில், டிராக்டர்களை பறிமுதல் செய்து, அரூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement