பாலீஷ் போட்டு தருவதாக பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி திருடிய இருவர் கைது
கிருஷ்ணகிரி; பாலீஷ் போட்டு தருவதாக கூறி, பெண்ணிடம் 8 பவுன் தங்கச்சங்கிலியை திருடிய இருவரை, போலீசார் கைது
செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பி.கொத்துாரை சேர்ந்தவர் தெய்வாணி, 53. இவ-ரது கணவர் ஆந்திர மாநிலம் பினேரியில் ஜவுளிக்-கடை வைத்துள்ளார். கடந்த ஜூலை, 2ல், தெய்-வாணி வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலை, 10:40 மணியளவில் துணி துவைத்து கொண்டி-ருந்தபோது, பித்தளை சாமான், நகைகளுக்கு பாலீஷ் செய்து கொடுப்பதாக கூறி, ஒருவர் வந்-துள்ளார். அவரிடம், 8 பவுன் நகையை தெய்வாணி கொடுத்துள்ளார். தண்ணீர் வேண்டுமென அந்த நபர் கூறியுள்ளார். வீட்டினுள் தெய்வாணி தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில், நகையுடன் மர்-மநபர் தப்பினார். தெய்வாணி புகார்படி, பர்கூர் போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், தெய்வாணியிடம் நகையை பறித்த நபர், அருகில் டூவீலரில் காத்திருந்த மற்றொரு நபருடன் ஏறி தப்பியது தெரிந்தது. போலீசார் விசாரணையில் அவர்கள் பீஹார் மாநிலம், பாகல்பூரை அடுத்த சபோரை சேர்ந்த கம்டியோ பிரசாத் ஷா, 51, மணீஷ் ஷா, 31 என தெரிந்தது. இவர்கள், பர்கூரில் பல இடங்களில் வேலைக்கு செல்வது போல் சுற்றித்திரிந்து வந்-துள்ளனர். அவர்களை பர்கூர் போலீசார் தேடி வந்-தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒப்பத-வாடி கூட்ரோடு அருகே பையுடன் சென்ற இருவ-ரையும், போலீசார்
கைது செய்தனர்.
மேலும்
-
சென்னையில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் சந்திப்பு
-
தமிழகத்தில் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ரோபோ செய்யும்!
-
இந்தியாவை விட்டு ராகுல் போய்விட்டாலே அச்சுறுத்தல் இருக்காது; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்த ஆண்டும் கிடைக்கவில்லை அமைதிக்கான நோபல் பரிசு; புலம்பி தவிக்கும் அதிபர் டிரம்ப்
-
தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…