புற்றுநோய் மருந்துகளின் விலை குறைகிறது; மத்திய அரசு அதிரடி

புதுடில்லி: நம் நாட்டில் லட்சத்தில் 60 பேருக்கு புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான உயிர் காக்கும் மருந்துகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. மருந்து நிறுவனங்கள் ரூ.2,700க்கு பெறும் மருந்துகளை, நோயாளிகளிடம் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை உச்சநீதிமன்றமே நேரடியாக கண்டித்தது.

எனவே, புற்றுநோயாளிகள் பலனடையும் வகையில், மருந்துகளின் விலை உச்சவரம்பை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, அட்டவணைப்படுத்தப்படாத புற்றுநோய் மருந்துகளின், சில்லறை விற்பனை விலை அதிகபட்சமாக எம்ஆர்பியில் (MRP) இருந்து 30 சதவீதமாக நிர்ணயம் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், மருந்துகளின் விலை 70% வரை குறைய வாய்ப்புள்ளது. நாட்டில் உள்ள புற்றுநோயாளிகள் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராண்டட், ஜெனரிக், உள்நாட்டு தயாரிப்பு, இறக்குமதி செய்யப்பட்ட, காப்புரிமை பெற்ற அனைத்து வகையான புற்றுநோய் மருந்துகளுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும்.

Advertisement