தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்; காங்கிரஸ் கோரிக்கையை டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு

11

புதுடில்லி: தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் இண்டி கூட்டணியினர் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த முயன்று வருகின்றனர். ஆனால், போராட்டத்திற்கு டில்லி போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல், பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த போலீசார் விதித்த தடையை எதிர்த்து காங்கிரஸ் இளைஞர் அமைப்பினர் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இளைஞர் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுவை 12ம் தேதிக்கு விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.

தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. இதற்காக, இன்று கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்த இருக்கிறது

Advertisement