தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்

1

-நமது நிருபர்-




தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது; உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.




அதன் விபரம்:

* உள்துறை செயலாளராக இருந்த மணிவாசன் நில நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* சிட்கோ நிர்வாக இயக்குனராக இருந்த கார்த்திக் ஐஏஎஸ்

உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

* தமிழக மின்பகிர்மான கழக தலைவர் பதவியில் இருந்து அருண் ராய் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement