அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: ஈரானுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எந்த நேரத்திலும் நாங்கள் ஈரானைத் தாக்கமாட்டோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரானுடன் நாங்கள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் ஈரான் மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும், அதன் மீதான பொருளாதாரத் தடைகள் முழு வீச்சில் தொடர்வதையும் நான் அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இச்சூழலில், அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எந்த நேரத்திலும் நாங்கள் ஈரானைத் தாக்கமாட்டோம். ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும்
-
பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
-
பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்
-
போலி வீடியோக்களுக்கு கடிவாளம்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
-
நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன்: எலான் மஸ்க்கை புகழ்ந்த டிரம்ப்
-
டில்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு: போலீஸ் கடும் எச்சரிக்கை
-
கோவையில் காட்டுக்குள் சட்ட விரோதமாக செயல்பட்ட 13 ரிசார்ட்டுகளுக்கு பூட்டு