மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதியிலும் தவெக முன்னிலை
-நமது நிருபர்-
மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணும் பணி இன்று (அக் 09) காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. முதல்சுற்று நிலவரப்படி, மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதியிலும் தவெக முன்னிலையில் உள்ளன.
மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6ம் தேதி நடந்த தேர்தலில் 85.9 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்களை எண்ணும் பணி ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் இன்று நடந்து வருகிறது.
வேட்பாளர்கள் - முதல் சுற்று நிலவரம்
1. தவெக (மரகதம் குமரவேல்)- 282
2. திமுக (பரந்தாமன்)- 158
3. அதிமுக (கணிதா சம்பத்)- 141
4. நாதக (ஜானகி ராமன்)- 5
5.மார்க்., கம்யூ., ( சுகந்தி)- 1
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் 80. சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. இந்த ஓட்டுக்களை எண்ணும் பணி திருப்பூர் எல்.ஆர்.ஜி.கல்லூரி வளாகத்தில் இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.
வேட்பாளர்கள்- முதல் சுற்று நிலவரம்
1.தவெக (சத்தியபாமா)- 1237
2. திமுக (சுகன்யா)- 632
3. அதிமுக (பானுமதி)- 524
4. இந்திய கம்யூ., (லட்சுமணன்)- 6
5. நாதக (கார்த்திகா)- 3
முதல்சுற்று நிலவரப்படி, மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதியிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
தட்டாஞ்சாவடி
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடியில் 80.81 சதவீத ஓட்டுப்பதிவாகி இருந்தது. இந்த ஓட்டுக்களை எண்ணும் பணி லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் வைத்து நடந்து வருகிறது.
1.என்.ஆர்.காங்., (அசோக் ஆனந்த்)
2. காங்., (விநாயகம்)
3. தி.மு.க., (சேதுசெல்வம்)
4. இந்திய கம்யூ., (சலீம்)
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி? 2 தொகுதிகள் நிலவரம் உடனுக்குடன் தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இந்தியாவில் இன்று அறிவிக்க இருக்கும் நாட்டின் பல பகுதிகளில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருந்தாலும் அதில் ஒரு ஓட்டு கூட திருட்டு ஓட்டு இல்லை என்பதையும் SIR மூலமாக பெற்றது தான் என்றும் இது SIRக்கு மட்டுமே கிடைத்த வெற்றி எனபதை காங்கிரஸ் உள்பட போராட்டம் நடத்தி வரும் எல்லா கட்சிகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
வாழ்த்துக்கள்
இந்தியாவில் இன்று அறிவிக்க இருக்கும் நாட்டின் பல பகுதிகளில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருந்தாலும் அதில் ஒரு ஓட்டு கூட திருட்டு ஓட்டு இல்லை என்பதையும் SIR மூலமாக பெற்றது தான் என்றும் இது SIRக்கு மட்டுமே கிடைத்த வெற்றி எனபதை காங்கிரஸ் உள்பட போராட்டம் நடத்தி வரும் எல்லா கட்சிகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்.மேலும்
-
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்
-
அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
-
பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்
-
போலி வீடியோக்களுக்கு கடிவாளம்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
-
நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன்: எலான் மஸ்க்கை புகழ்ந்த டிரம்ப்