நானா படேகரின் இறுதிச்சடங்கை இரவில் நடத்தியது ஏன்? மகன் சொன்ன காரணம்

புனே: நடிகர் நானா படேகர் கோவாவில் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல தேசிய விருதுகளை பெற்ற அவரது உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கோவாவில் இருந்து புனேவுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்குள்ள பண்ணை வீட்டில் நேற்று மாலை படேகரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், இரவு 11.30 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை கொடுத்தனர். மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தாமதமான பிறகும், நானா படேகரின் இறுதிச்சடங்கை இரவோடு இரவாக செய்தது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு, அவரது மகன் மல்ஹார் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது; குடும்பத்தினர் அனைவரும் கோவாவில் இருந்தனர். தந்தையின் உடல் புனேவில் இருக்கும் பண்ணை வீட்டுக்கு நேரமாக கொண்டு வரப்படும் என்று நினைத்தேன். ஆனால், தாமதமாகி விட்டது. என் தந்தையும் அதிகாலையிலேயே இறந்து விட்டார். ஏற்கனவே ரொம்ப நேரமாகி விட்டது. இதனால், மறுநாள் இறுதிச் சடங்கை நடத்த என்னுடைய குடும்பத்தினர் விரும்பவில்லை. எவ்வளவு நேரமானாலும், இன்றே செய்து முடிக்க முடிவு செய்து, அதன்படி அனைத்து காரியங்களையும் செய்தோம், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement