இந்திய இணைய உலகை கைப்பற்ற அமெரிக்கா சதி: ‛‛மாஸ்கை'' கழற்றி கொடூர முகம் காட்டும் மஸ்க்

82

உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்கின் பார்வை இந்தியா மீது முன்பே பதிந்துவிட்டது. இந்தியாவின் இணைய மார்க்கெட்டை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற துடியாய் துடிக்கிறார். அதற்காக அனைத்து விதமான நாடகங்களையும் போட ஆரம்பித்து விட்டார். அவருக்கு அந்நாட்டின் அதிபர் டிரம்ப் முடிந்தளவுக்கு முட்டு கொடுப்பார்.

இந்திய இணையத்தின் வலிமை

* ‛‛டிராய்'' கணக்குப்படி 2026 மார்ச் வரை இந்தியாவில் உள்ள வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 104 கோடி.

* கேபிளுடன் கூடிய இன்டர்நெட் இணைப்பு வைத்துள்ளவர்கள் 4.66 கோடி.

* அதே நேரம் அமெரிக்காவில் இன்டர்நெட் இணைப்பு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் 33 கோடி.

அதாவது அமெரிக்காவை விட இந்தியாவில் உள்ள இணைய இணைப்புகளின் எண்ணிக்கை எத்தனை மடங்கு என பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த அபரிமிதமான மார்க்கெட் தான் அமெரிக்காவையும் அது போட்ட குட்டி எலான் மஸ்கின் கண்ணையும் உறுத்துகிறது. இந்தியாவிற்குள் நுழைய சகலவிதமான சாகசங்களையும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் நேரடியாக சாட்டிலைட் வழியாக இணைய தொடர்பை வழங்குகிறது. பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவிற்குள் நுழைய மட்டும் இது கொஞ்சம் சிரமப்படுகிறது. காரணம் இந்தியா மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை.

நேரடியாக சாட்டிலைட் மூலம் இயங்குவதால் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் நமது நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வராது. இந்தியர்கள் பற்றிய அனைத்து தரவுகளும் அமெரிக்கர்களின் கைக்கு எளிதாக சென்று விடும். அதை வைத்துக்கொண்டு அவர்கள் நம் நாட்டுக்குள் ஏகப்பட்ட அரசியல் விளையாட்டுகளை விளையாடுவார்கள். இது தெரிந்து தான் இந்தியா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பொறுத்து பொறுத்துப் பார்த்த எலான் மஸ்க், தனது ''மாஸ்கை'' கழற்றிவிட்டு, தனது கொடூர முகத்தை காட்டுகிறார். ‛‛இந்தியாவுக்கு யார் முதலாளி? அம்பானியா'' என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இந்தியர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது'' என்றும் கூறியுள்ளார்.

அதாவது, மஸ்கின் ‛‛ஸ்டார்லிங்கை'' இந்தியாவிற்குள் நுழைய விட்டால், மத்திய அரசு நல்ல அரசாகிவிடும். இல்லாவிட்டால் அது கெட்ட அரசு. நம் ஊரில் மலிவாக கிடைக்கும் இணையதள வசதி, ஸ்டார்லிங்கிடம் போனால் 20 மடங்கு கட்டணம் உயரும். ஏழைகளுக்கும் இன்டர்நெட் வசதி கிடைப்பது பாதிக்கப்படும். மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

அடுத்த என்ன செய்வார்கள்?

* அடுத்து இந்த அமெரிக்கர்கள் என்ன செய்வார்கள். நம் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான வேலையை ஆரம்பிப்பார்கள்.

* ஸ்டார்லிங்கின் தொழில்நுட்பம் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதை இந்தியாவிலும் செயல்படுத்த தீவிரமாக துடிக்கிறார்கள்.

* அடுத்து டில்லியை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கும்.

* மதம், ஜாதி, வடக்கு - தெற்குப் பிரிவினை, தொகுதி மறுவரையறை, ஹிந்தி திணிப்பு என ஒவ்வொரு பிரச்னையாக உருவாக்குவார்கள்.

* உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மோசமாக இருப்பதாகவும், அதற்குக் காரணம் பிரதமர் மோடிதான் என்றும் அனைத்து சமூக ஊடக அல்காரிதம்களும் உங்களை நம்ப வைக்கும்.

* மோடிக்கு எதிரான பதிவுகள் பன்மடங்கு பெருகும். மோடிக்கு ஆதரவான பதிவுகள் ஒடுக்கப்படும்.

* போராட்டக்காரர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்று போலி வீடியோக்கள் பரப்பப்படும். தீயது நடக்கப் போகிறது. அரசு அராஜகம் செய்கிறது என்று மக்கள் நம்ப வைக்கப்படுவார்கள்.

* சமூக ஊடக அல்காரிதம் மிகப்பெரிய கருவியாக பயன்படுத்தப்படும். உலகளாவிய ஊடகங்களும், இந்தியாவில் புரட்சி நடக்கப் போகிறது என்று ‛‛பூச்சாண்டி'' காட்டும்.

* உண்மையில் மோடியின் வலிமையான தலைமை மீது அமெரிக்கா விரக்தியடைந்துள்ளது. அவர் மேற்கத்திய நாடுகளுக்கு முன் மண்டியிடவில்லை. எனவே அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ, மோடிக்கு எதிராக பல்வேறு திட்டங்களை தயாரித்து வருகிறது.

* தேர்தல் ஆணையம், ‛‛நீட்'' எதிர்ப்பு, மத்திய அரசு எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் எல்லாமே அப்படிப்பட்டவை தான். இந்த சதி வலையில் நம் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களும் சிக்குவது தான் இன்னும் கொடுமை. எனவே, பொதுமக்கள் தான் கவனமாக இருந்து நாசகார சக்திகளுக்கு எதிராக நின்று நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

ஆனால், மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கும் ராகுல், வழக்கம் போல இந்திய அரசை எதிர்கொள்ள நமக்கு ஒரு ஆள் கிடைத்தான் என்று எலான் மஸ்க்கை வரவேற்று, ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

Advertisement