நல்லாட்சிக்கு நற்சான்று செங்கோட்டையன் மகிழ்ச்சி

திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

இந்த வெற்றி, தமிழகத்தில் வரலாறு படைத்துள்ளது. இந்த நல்லாட்சிக்கு நற்சான்று வழங்கும் வகையில், மக்கள் நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

அதற்கான கூடுதல் எம்.எல்.ஏ.க்களை கொடுத்துள்ளனர். இந்த தொகுதியில் எந்த குறையும் இல்லை என, சொல்லும் வகையில், மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் முதல்வர் ஒப்புதலோடு செய்ய உள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement