நதி நீர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க திட்டம்; அக் 13ல் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதல்வர் விஜய்
சென்னை: தமிழக முதல்வர் விஜய், அக்டோபர் 13ம் தேதி விஜயவாடாவில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆந்திரப் பிரதேசம் ஆண்டுதோறும் 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை மாநில எல்லையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இருப்பினும், இந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி வரை தமிழகத்திற்கு 2.251 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே கிடைத்தது.
இது மட்டுமின்றி, ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குள் வரும் ஆறுகளில் அணை கட்டவும் அந்த மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தவும், நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தவும் தமிழக முதல்வர் விஜய், வரும் 13ம் தேதி விஜயவாடா செல்கிறார்.
அங்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்த இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளன.
பரவாயில்லையே! இதைப் போன்ற ஆக்கபூர்வமான காரியங்களை செய்வது விஜய் மீது நல்ல எண்ணங்களை ஏற்படுகிறது.மேலும்
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
-
தயார் நிலையில் 25 ஆயிரம் போலீசார்: டில்லியில் இன்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்
-
மாணவர்களுக்கான பணத்தில் ஊழல் செய்வதற்கு பதில் பிச்சை எடுக்கலாம்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்
-
ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: விமானி உட்பட 3 பேர் பலி