வாகன விபத்தில் இளைஞர் பலி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தாமரைக்குளம் அருகே கார் மோதியதில், ரோட்டோரத்தில் நடந்து சென்றவர் பரிதாபமாக இறந்தார்.

கிணத்துக்கடவு, பெரியநகரை சேர்ந்தவர் அருணகிரி, 34.

இவர், ‘மொபைல் பஞ்சர்’ கடை நடந்தி வந்தார். பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில், தாமரைக்குளம் அருகே ரோட்டோரத்தில் நடந்து சென்றார்.

அப்போது, அவ்வழியாக அதிவேகமாகவும், அஜாகிரதையாகவும் வந்த கார், அருணகிரி மீது மோதியது.

இதில், படுகாய மடைந்த அவரை மக்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுக்கோட்டையை சேர்ந்த கார் டிரைவர் பரத், 36, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement