ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: விமானி உட்பட 3 பேர் பலி
ரியாத்: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், சவுதியா ஏர்லைன்ஸ் விமானி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஏமனில் அரசுப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. இதில் அரசுப் படைகளுக்கு, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில், சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள 'கிங் காலித்' சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று பயங்கர ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்தினர். இந்தத் தாக்குதலில் சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கேப்டன் ஹமூத் அலி அல்-கல்தாமி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக, சவுதி அரசு உறுதி செய்துள்ளது. மேலும், விமான நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றும் சேதமடைந்தது. எனினும், அந்த நேரத்தில் விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்ட, ஏவுகணைகளின் பாகங்கள் விழுந்ததில், நகரில் உள்ள ஒரு மழலையர் பள்ளி மற்றும் மருத்துவ வளாகம் லேசான சேதமடைந்தன. இத்தாக்குதலால் விமான சேவைகள் பல மணி நேரம் ரத்து செய்யப்பட்டு, தலைநகர் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.
இதற்குப் பதிலடியாக, சவுதி கூட்டுப் படைகள் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையம் மற்றும் கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்ததாக ஹவுதி தரப்பு தெரிவித்துள்ளது. இரு தரப்பிற்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
விடுங்கப்பா ........ யார் செத்தாலும் தீவிரவாதிதான்.
. இந்தியா போன்ற பாதுகாப்பான நாடு எங்குமே இல்லை. மோடி இல்லையெனில் இங்கே பாதுகாப்பு இல்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
ஆசிம் முனீர் இப்போ எங்கே பதுங்கி இருக்கான்? துருக்கி மூர்க்க கூட்டம் எங்கே?
தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஈரான், துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒடுக்கப்படனும். ஆனால் உலக நாடுகள் ஒற்றுமையான ஆதரவு தரவில்லை. அமெரிக்காவும், அரபு நாடுகள் மட்டுமே போராடுகின்றன.மேலும்
-
டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
-
நதி நீர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க திட்டம்; அக் 13ல் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதல்வர் விஜய்