சீர்காழியில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதியில் நேற்று முன்தினம் இரவு பங்களா குளத்து மேட்டு தெருவை சேர்ந்த முருகன் மகன் நீலகண்டன், 22. என்பவர் சாலையில் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை கண்ட மக்கள் அலறி அடித்து ஓடினர்.
வணிகர்கள் கடைகளை அடைத்தனர். தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சீர்காழி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நின்ற நீலகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகண்டன் கடந்த மார்ச் மாதம் போதையில் உடன் பழகியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் சிறை சென்றவர். ஜாமீனில் வெளிவந்து கோவையில் பணியாற்றிய அவர் இரு தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
‘மின் ரீடிங்’ குளறுபடியால் பாதிப்பு கணக்கீடு ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’
-
தாராபுரம் தொகுதி போட்டியிட்டவர்கள் பெற்ற ஓட்டு விவரம்
-
அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
-
கத்தி முனையில் பணம் பறித்த நால்வர் கைது
-
தாய்மாமன் தங்க மோதிரம் பெற அலைக்கழிக்கப்படும் பெண்கள்!
-
நிலத்தகராறில் முதியவர் கொலை 4 பேருக்கு ஆயுள் தண்டனை