ஓவிய ஆசிரியர் குத்திக்கொலை மூவரை தேடுது போலீஸ்
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, ஓவிய ஆசிரியரை குத்திக் கொலை செய்த மூவரை குன்னம் போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலுார் மாவட்டம், பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி, 50. இவர், கல்லகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று பெரம்பலுார் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள தனது சகளை ராதாகிருஷ்ணன், 56, என்பவரது வீட்டுக்கு வந்தார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் இவரை இதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 35, சிவசூர்யா,30, நவநீதகிருஷ்ணன்,32, ஆகிய மூவரும் சேர்ந்து ஓ ட ஓட விரட்டி சென்று ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தப்பியோடி விட்டனர். இதுகுறித்து, குன்னம் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
-
நதி நீர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க திட்டம்; அக் 13ல் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதல்வர் விஜய்
-
தயார் நிலையில் 25 ஆயிரம் போலீசார்: டில்லியில் இன்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்
-
மாணவர்களுக்கான பணத்தில் ஊழல் செய்வதற்கு பதில் பிச்சை எடுக்கலாம்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்
-
ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: விமானி உட்பட 3 பேர் பலி
-
வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் திருடியவருக்கு வலை
Advertisement
Advertisement