நெய்வேலி பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

நெய்வேலி: கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் கோபி. பிரபலன ரவுடியான இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கடந்த ஆக., 16 ம் தேதி நெய்வேலி வட்டம் 2ல் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது அருந்தி கொண்டிருந்த ஆனந்தராஜை கொலை செய்ய முயன்றார். அதனை தடுக்க முயன்ற நரேஷ் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து கோபி, வினோத்குமார், தில்சன்குமார், சக்கரை (எ) சுரேஷ் உட்பட 18 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களில், சரித்திர குற்ற பதிவேடு குற்றவாளியான கோபி மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி என ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையை ஏற்று, கோபியை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள கோபியிடம் நேற்று நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழங்கினர்.

Advertisement