மண் கடத்தல் 2 டிராக்டர்கள் பறிமுதல்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மண் கடத்திய 2 டிராக்டர்களை சப் கலெக்டர் பறிமுதல் செய்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த ஷேக்உசேன்பேட்டை அருகே திருக்கோவிலுார் சப் கலெக்டர் கார்த்திக் ராஜா மற்றும் உளுந்துார்பேட்டை தாசில்தார் பாலசுப்ரமணியன் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்தவித ஆவணங்களுமின்றி மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
‘மின் ரீடிங்’ குளறுபடியால் பாதிப்பு கணக்கீடு ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’
-
தாராபுரம் தொகுதி போட்டியிட்டவர்கள் பெற்ற ஓட்டு விவரம்
-
அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
-
கத்தி முனையில் பணம் பறித்த நால்வர் கைது
-
தாய்மாமன் தங்க மோதிரம் பெற அலைக்கழிக்கப்படும் பெண்கள்!
-
நிலத்தகராறில் முதியவர் கொலை 4 பேருக்கு ஆயுள் தண்டனை
Advertisement
Advertisement