கோகுலம் மருத்துவமனை சார்பில் நாளை தீவிர சிகிச்சை கருத்தரங்கு

சேலம்; சேலம், ஸ்ரீகோகுலம் மருத்துவமனை சார்பில், நாளை, தீவிர சிகிச்சை குறித்த கருத்தரங்கு நடக்க உள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி, நிருபர்களிடம் கூறியதாவது:கோகுலம் மருத்துவமனை சார்பில், அவசர மற்றும் தீவிர சிகிச்சை குறித்த கருத்தரங்கு, அக்., 11(நாளை) காலை, 9:00 மணிக்கு, ரேடிசன் ஓட்டலில் நடக்க உள்ளது. பல்வேறு துறைகளை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், அவசர சிகிச்சைகள் மற்றும் தீவிர சிகிச்சை கள் பற்றி, பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். சேலம், அதை
சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவர்கள் செல்லம்மாள், பிரகாசம், ராஜேஷ், நாகூர் மீரான், ஜெயதேவ், மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement