பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்

1

புதுடில்லி: நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனாமா அரசுடனும், மக்களுடனும் இந்தியா ஆதரவாக துணை நிற்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், நேற்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது, பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

பனாமா சிட்டியில் வீடுகள், அலுவலகங்களில் இருந்து வெளியே ஓடி வந்த மக்கள், சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். லோஸ் சாண்டோஸ் மாகாணத்தில், 1938ல் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட புகழ்பெற்ற கத்தோலிக்க சர்ச், நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், ''நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனாமா அரசுடனும், மக்களுடனும் இந்தியா ஆதரவாக துணை நிற்கும்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்காகவும், துயரங்களைச் சந்தித்த குடும்பங்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement