எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்காதீர்கள்; உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
வாஷிங்டன்: ''நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்; எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்காதீர்கள்; அது உலகளாவிய சிக்கலை உருவாக்கும்'' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவின் டென்னசியில் உள்ள கிளார்க்ஸ்வில்லில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த போரை பலமுறை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க முடியும், அவர் அதைச் செய்ய விரும்பவில்லை. இது மிகவும் கடினமான விஷயம்.
போர் துவங்கிய போது நான் அதிபராக இருந்திருந்தால் போர் துவங்கி இருக்காது. அதாவது தேர்தல் முறைகேடு செய்யப்படாமல் இருந்திருந்தால் நான் அதிபராக இருந்திருப்பேன். இந்த போரை ஒருபோதும் துவங்காமல் தடுத்து இருப்பேன்.
அப்போது அமெரிக்க அதிபராக இருந்தவர், இந்த போரை தீர்த்து வைத்திருக்க முடியும். அவர் அதைச் செய்யவில்லை. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தாக்க கூடாது; அது உலகளாவிய சிக்கலை உருவாக்குகிறது.
உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் டீசல் எரிபொருளில் பெரும் பகுதியை ரஷ்யாவே வழங்குகிறது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான போருக்கு எந்தக் காரணமும் இல்லை. இரு தரப்பிலும் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.
1. அதிபர் தேர்தலிக்குமுன் நான் ஆட்சிக்குவந்தால் ஒரேநாளில் போரை நிறுத்திவிடுவேன் என்றார்.
இவர் இப்போது உக்ரேன் அதிபர் முயற்சி செய்திருந்தால் இந்த போரை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும் என்கின்றார்.
. 2. Before the election the US President promised to stop the war within a day .
Now the President singing different tune shifting the burden & blame to the Ukraine President. Very sad indeedமேலும்
-
சவுதியின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதுணையாக நிற்கிறோம்: ஹவுதி தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
-
பெண் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் வழங்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய் உறுதி
-
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு என் பெயரை வைத்து விடலாம்; சொல்கிறார் டிரம்ப்
-
தேவையற்ற தலையீடு: ஐநா மனித உரிமை அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
-
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி தீவிரம்
-
பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்